User Reviews for Poriyaalan


Poriyaalan - Pakka Family Entertainment
on

பொறியாளன் – போலி ரியல் எஸ்டேட் ப்ரோக்கர்கள் எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றுகின்றனர் அதனால் பாதிக்கப்படும் மக்கள் சந்திக்கும் சோதனைகளையும் கூறும் திரைப்படம்.

சிவில் படிப்பு முடித்து பெரிய பில்டிங் எஞ்சினியர் ஆகா வேண்டும் என்பது ஹரிஸ் கல்யாண் (சரவணன்) ஆசை. தன் நண்பர்களுடன் ஆடல் பாடல் சந்தோசம் என வாழ்ந்து கொண்டிருக்கிறார். இடை இடையே தன் நண்பனின் தங்கச்சிக்கும் ரூட் விடுகிறார் நம்ம ஹீரோ. பெரிய பில்டிங் எஞ்சினியர் ஆகா வேண்டும் என்பதினால் ஒரு இடத்தை வாங்கி பிளாட் வீடுகள் கட்டி விற்கலாம் என்று ஆசை படுகிறார். அதற்காக போலி ரியல் எஸ்டேட் ப்ரோக்கர்களிடம் சிக்கி அவதிக்கு உள்ளாகிறார். ஹரிஸ் கல்யாணின் நண்பன் ஒரு பெரிய ரவுடி கும்பலுடன் வேலை செய்கிறார். வட்டிக்கு காசு கொடுக்கும் ரவுடி. காசு வரவில்லை என்றால் கொலை தான் அந்த அளவுக்கு பெரிய ரவுடி. அப்படி இருக்கையில் தன் நண்பனுக்கு பண உதவி செய்தால் நம்மளும் இந்த வீடு கட்டும் தொழிலில் நிறைய சம்பாதிக்கலாம், இந்த ரவுடி தொழிலையும் விட்டு விடலாம் என்று எண்ணுகிறார். கோடிகணக்கில் காசு கொடுத்து ஒரு இடத்தினை வாங்குகின்றனர். ஆனால் அந்த போலி ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் போலி ஆவணங்களை கொடுத்து இவர்களை ஏமாற்றுகிறார். ஹரிஸ் கல்யாண் அந்த பணத்தினை திரும்ம பெற்றார? வில்லனிடம் வாங்கிய காசுக்கு தன் நண்பன் பதில் சொன்னனரா? என்பது மீதி கதை.

போலி ரியல் எஸ்டேட் ப்ரோக்கர்கள் எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றுகின்றனர் என்பதினை சுவாரசியமாக காட்டுகிறார் இயக்குனர். ரியல் எஸ்டேட் அதிபராக வரும் மோகன் ராம் அருமையான நடிப்பு.

ஹரிஸ் கல்யாண் ரொம்ப அமைதியாகவும், அழகாகவும் இருக்கிறார். இறுதியில் வரும் சண்டை காட்சி ரொம்ப இயல்பாக உள்ளது. ஹீரோயின் பெரிதாக நடிக்கும் வைப்பு இல்லை.

டெல்லி கணேஷ் வரும் அந்த 10 நிமிட காட்சி அனைவரையும் வெகுவாக கவர்கிறது. “சரவண பிரபு.. பிரபு சரவணன்” அங்கே அங்கே மயில் சாமி சிரிக்க வைக்கிறார்.

படம் துவங்கிய சில நிமிடங்களில் கதைக்குள் படம் நுழைகிறது. திரைக்கதை படத்தினை வேகம் குறையாமல் கொண்டு செல்கிறது இருந்தாலும் காதல் காட்சிகள் மற்றும் பாடல்கள் இந்த படத்தின் வேகத்தினை தடை போடுகிறது.

பொறியாளன் – குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்

www.kollywoodtimes.in

2