இதுதான் என் முதல் பட விமர்சனம், என்னவோ தெரியல இந்த படம் என்ன விமர்சிக்க தூண்டிருச்சு. இந்தப்படத்தபத்தி போதிய விமர்சனங்கள் ஏற்கனவே இங்க குவிந்திருக்க. என் கேள்வி என்னனா, எப்படி இந்த கதைக்கு ரவியும் மற்றவர்களும் ஒத்துக்கிட்டாங்கனு தான். பெரும்பாலானோர் ரவி, பிரபு, விவேக்-க poster-ல பாத்துட்டுதான் வறாங்க, ஆனா அவங்க முகத்தல கரிய பூசி கோமாளி ஆக்கிருச்சு இந்த படம்.
ரவிக்கிட்ட ஒரு கேள்வி கேக்கனும், எப்படி இப்படி ஒரு கதைய Commit செஞ்சு நடிக்க ஒத்துக்கிட்டீங்க. பேராண்மை, M. குமரன், நிமிர்ந்து நில்(கதையளவி லாவது) போன்ற சிறந்த படங்களில் நடித்த உங்களுக்கு இந்தப்படம் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி அவமரியாதையை பெற்று தந்திருக்கிறது. கதை தேர்வு என்பது ஒரு நடிகனுக்கு ரொம்ப முக்கியம், இந்தப்படம் அடுத்து வரும் உங்கள் படங்களுக்கு மிக எளிதில் ஒரு நிலையில்லாத்தன்மையை சம்பாதித்து தந்திருக்கிறது. சினிமாவில் பலபேர் வந்து ஒரு இடத்தைப் பிடித்து, பிறகு காணாமல் போனவர்கள் நிறையபேர் உண்டு. அப்படி நீங்களும் ஆகக்கூடாது என்பதுதான் பலரது விருப்பம். சொல்லப்போனால் இந்தப்படம் உங்களுக்கு அனுபவம் அல்ல எச்சரிக்கை, "தாஸ்", "இதயத்திருடன்" போன்ற படங்கள்தான் அனுபவம் இது அல்ல...
பிரபு, விவேக் - இதுபோன்ற படங்களில் உங்களை இணைத்துக்கொண்டு உங்கள் மேல் உள்ள மரியாதையை குலைக்கவேண்டாம்.
சுராஜ் கிட்ட கேக்க ஒன்னுமில்ல, "தலைநகரம்" போன்ற படங்களை தர விரும்பினால் மட்டும் மீண்டும் உங்களை சந்திக்க விரும்புகிறேன்.
கடைசியாக ஒரு வேண்டுகோள், இதுபோன்ற படங்களில் சிவாஜி அவர்களின் பாடலையோ, வசனத்தையோ, உருவப்படத்தையோ இனைத்து அவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்.
எத்தனையோ மொக்கை பார்த்துருக்கேன்..
இப்படி ஒரு மரண மொக்கை பாத்ததில்லை....
donate money to the needful instead of making such a disgusting thing " CANT EVEN CALL IT A MOVIE" dont waste yours and others time nonsense
Totally spoil the Trisha character.......Very waste of money waste of time for watching and also film production...I suggest to suraj Please learn from new direction and understand our heart beat...